புன்னகை

புன்னகை
எளிதாய் கிடைத்தாலும்
விலைமதிக்க முடியாத ஒன்று.. ..

முழுதாய் வாழப்படும் சில வினாடிகள் ....

வாழ்வை நீடிக்கும் மந்திரம் ...

நம்மை நாமே அழகாய் ரசிக்கும் தருணம் ....

உணர்சிகளின் கதாநாயகன் ...

விழாவிற்கு கடைசியாக வரும் சிறப்பு விருந்தினர் போல ..
வாழ்க்கையில் அழுகை ,பயம் போன்ற
பலவற்றிற்கு பிறகு கடைசியாக வரும் உணர்ச்சி...

வாழ்வின் கஷ்டங்களை பார்த்து செய்யப்படும் ஏளனம் ...

"சிரிக்க தெரிந்தவன்
வாழத்தெரிந்தவன் "

எழுதியவர் : dharma .R (19-Nov-14, 10:46 am)
Tanglish : punnakai
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே