சந்திரன்
வானத்தில் இருப்பவனோ
பூமிக்கு சொந்தக்காரனோ
இரவின் பகலவனோ
அழகில் சிறந்தவனோ
காதலில் விழுந்தவனோ
தேய்ந்து வளரும் வரம் கொண்டவனோ
பெண்மையின் அழகை சொல்பவனோ
ஆண்களின் அடையாளம் ஆனவனோ
ஆதிக்கம் நிறைந்தவனோ
கவிதைக்கு வழி செய்பவனோ
காதலுக்கு துணை நின்றவனோ
மேகத்துள் ஒளி ஆனவனோ
அவன்தான் சந்திரனோ....