கல்மாடத்துச் செந்நிலா
அன்றொரு நீலநாளில்
பௌர்ணமிகள் குழைத்துப்
பகிருவதாய்ச் சொல்லி
கொத்தளத் தாழ்வாரத்தினடியில்
உன்
வரவுகளுக்காய் காத்திருந்த
சாம நாழிகைகளின்... ஓர்
துளிவீழ்ந்து
தாயாகி விட்டிருந்தது.... கற்தூண்..!!
இன்றைய .. வறண்ட
காலங்களிலும்.. எனக்குள்ளினாலான
உன்னைப்போலவே
இன்னமும்...
கற்தூண் வருடி
வளர்த்தமடி மறக்காமலிருந்தன
கிழித்துத் திமிறியிருந்த
முட்புதர்கள்....
நானும் கூட
முட்கள் வருடிக் கொண்டே
காத்திருக்கிறேன்
சிதைந்திருந்த
தாழ்வாரத்தினடியில்.....!!
படஉதவி...:க்கு நன்றி முகநூல் நட்பு நிறம் வில்வம்

