கார்பரேட் பிச்சைக்காரன்

உச்சி வெயிலு மண்டைய பொளக்க..
மச்சு வீடு வேணும் மாருதி காரு வேணும்னு-உலகம்
ஓடி கிடக்க..
அம்மா தாயேனு சத்தம் கேக்குது
என் கழுத்துக்கு பின்னால!!!..
கையும் காலும் நல்ல இருக்க...
ஏன் இந்த பிச்சையின்னு நான் கேக்க???
ஐயா சாமி!!!
சொந்த பந்தம் ஏதும் இல்ல..
கண்ணுலதான் பார்வை இல்ல..
ஓடி ஆடி வேலை செய்ய உடம்புலத்தான் தெம்பு இல்ல..
உக்காந்து வேலை செய்ய ஒரு வேலை எனக்கு இல்ல..
அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கையில்தான் காசு இல்ல..
அதனால நான் இங்க பிச்ச கேக்குறேன்.
அடிச்சு பிடிச்சு பஸ்லதான் சீட்ட புடிச்சி
நசுங்கி பிசுங்கி வேலைக்கு போனேன் கார்பரேட் கம்பனிக்கு..
பத்து ரூபா வேலைக்கு கிடைக்குது கால் ரூபா சம்பளமா!!!
ஒத்த ரூபா ஒசத்தி கேட்ட அடி விழுகுது மண்டையில..
போர்க்கொடி நான் பிடிச்சா உதப்பங்க வெளியில...
ஒண்ணாந்தேதி வந்தபோது கோடிஸ்வர தோரணைதான்..
பத்தாந்தேதி ஆனபோது பிசுக்கனாய் போனேனப்பா...
இந்த கதைய அவன் கேட்டு அடுத்த கிராக்கி தேடி போனான்.
பிச்சைகாரன் புரிஞ்சிகிட்ட என் நிலைய
கார்ப்பரேட் கம்பெனி கேக்ககூட மறுக்குதப்பா!!