அன்புள்ள அப்பா
அப்பா ஹமீத் தன் வேலை பளுகாரணமாக டென்சனாக இருக்கிறார். ஆயிஷா அவருடைய மகள் வீட்டில் சுட்டி செய்வதை பார்த்து கோபத்தை அடக்க முடியாமல் ஆயிஷாவை திட்டி அடித்து விடுகிறார் ஆயிஷா அழுது கொண்டே சென்று விட , மறுநாள் காலையில் வேலைக்கு செல்லும் வழியில் ஒரு அப்பா தன் பிள்ளையை அடிக்க பார்க்கிறார். அந்த பிள்ளை அடி வாங்கி அழுவதை பார்த்து ஹமீதுக்கு ஒரே வேதனை. தன் மகளையும் நேற்று நாம் திட்டி அடித்தோமே என்ற நினைப்பு மீண்டும் மீண்டும் அவர் இதயத்தை பிழிந்தெடுத்தது. அலுவலகத்துக்கு சென்று இதை நினைத்து சற்று அழுதுவிட்டார். யாருக்கும் தெரியாமல் கண்ணீரை தொடைத்து கொண்டு. திரும்பி வீட்டிற்க்கு செல்லும்போது மகளுக்கு பிடித்த நிறைய தின்பண்டங்கள் சாக்லேட்டுகள் என்று வாங்கி சென்று மகளிடமே கோபம் கொண்டதற்கும் திட்டியதற்கும் அடித்ததற்கும் மன்னிப்பு கேட்டார் ஹமீத். இதை கேட்ட மகளும் அழுது என்னையும் மன்னித்து விடுங்க அப்பா என்று சொல்ல. உங்கள் இருவருக்கும் இதே வேலையா போச்சு என்று அம்மாவும் அவர்களுடன் சேர்த்து கொள்ள வீடே ஆனந்தத்தில் மகிழ்ந்தது.