அன்பே திவ்யா

என் குறிப்பு:-
நான் பல நாட்கள் கண்ட கனவு கதை எழுதுவது. அதை இந்த எழுத்து.காம் நிறைவேற்றி வைத்திருக்கிறது. எனக்கு பல கதைகள் தோன்றுவதுண்டு.. அதை எழுத்தின் மூலம் சொல்ல தெரிவதில்லை... ஏதோ குறிப்பு மாதிரி எடுத்து என் டைரியின் பக்கங்களை நிரப்பி மட்டுமே கொண்டிருக்கிறேன். இப்பொழுதுதான் ஒரு தைரியம் வந்தது எழுதி தான் பார்ப்போமே என்று.. இந்த கதையை வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கும் மாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் நான் ஒரு நம்பிக்கையுடன் மேலே தொடர முடியும்... வாசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...

கதை:
"ஏன்டா உனக்கு புரியுதா? இல்லையா?, உனக்காக தானே விஷம் குடிச்சி திவ்யா ஆஸ்பத்திரியில இருக்கா!
இப்பவாவது அவ காதல ஏத்துக்கோடா."என்று அனாமிகா சொன்னாள்.
சத்யா ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்தான்.
சத்யா ஆஸ்பத்திரியில் வார்டுக்குள் நுழையும் போது திவ்யா அருகில் அவளுடைய அம்மா உக்காந்து இருந்தாள்.
"யாருப்பா நீ!"
"நான் சத்யா அவ காலேஜ்ல படிக்கிறேன், பாத்துட்டு போலாம்னு வந்தேன்"
"நீயாவது எதுக்காக விஷம் குடிச்சானு கேட்டு சொல்லுப்பா. நான் போய் டீ வாங்கிட்டு வரேன்"
"சரிம்மா"
சத்யா திவ்யாவிடம் திரும்ப,
திவ்யா " சத்யா இப்பவாவது என்னனு சொல்லு, என்ன எதுக்கு அவாய்ட் பண்ற"

சத்யா " திவ்யா சொன்னா புரிஞ்சிக்கோ, நான் விரும்புற யாரும் உயிரோட இருந்ததில்ல, நான் விருப்பப்பட்ட ஏதும் எனக்கு கிடச்சதில்ல, அதனால தான் நான் ஒரு அனாதையா இந்த மடத்துல
படிச்சிட்டு இருக்கேன். எனக்கு இது ஒரு சாபம் மாதிரி தோணுது, என்னால இனி ஒரு உயிரும் போக வேண்டாம்னு தான் நினைக்கிறேன்"

திவ்யா " எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும். உன் கூட 5 நிமிஷம் வாழ்ந்தாலும் எனக்கு அதுவே போதும்"

சத்யா "சரி! நாளைக்கு பாக்கலாம் உடம்ப பாத்துக்கோ, நான் வரேன்"

திவ்யா " பதில் சொல்லாமே போற"

சத்யா " நாளைக்கு தெரியும்!"
சத்யா திரும்பி நடக்க ஆரம்பிக்கிறான்.

காலைப்பொழுது.
அனாமிகா " திவ்யா திவ்யா" என கூவிக்கொண்டே திவ்யா வீட்டுக்குள் நுழைகிறாள்.
திவ்யா " என்னடி என்ன ஆச்சு இப்படி வர"
"ஏய் நம்ம சத்யா கிளாஸ் ரூம்ல செத்து கெடக்கிறான் டி"அனாமிகா.

திவ்யா கிளாஸ் ரூமை நோக்கி ஓடுகிறாள்.
சத்யாவை அணைத்து கட்டி அழுகிறாள்.
எல்லோரும் கரும்பலகையை பார்க்கிறார்கள்:
அனாமிகா" திவ்யா அங்க பாருடி"
திவ்யா நிமிர்ந்து பார்க்கிறாள்.
கரும்பலகையில்
" திவ்யா உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா என்னுடைய சாபம் எங்க உன்னையும் கொன்ரும்னு ரொம்ப பயந்தேன். ஏனோ நான் இந்த சாபத்த நம்புறேன்.. என் கண் முன்னாடியே எல்லாரும் இறந்து போனாங்க. எனக்காக நீ சாக நெனச்ச போதே நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். அத உன்கிட்ட புரிய வைக்க எனக்கு தெரில,
சாபம் உனக்கு உண்மையோ? பொய்யோ? ஆனா நான் உன் மேல வச்சி இருக்கிற காதல் உண்மை!..
இனி என்னால் ஒரு உயிரும் போக வேணாம். என் சாபம் என்னோடையே போகட்டும்,

என் உயிர்
உடல் என்னும் கூடை
மட்டும் தான் பிரிந்திருக்கிறது
உன்னை அல்ல!...

இப்படிக்கு
சத்யா"""

முற்றும்...


பின்குறிப்பு:
தயவு செய்து திட்டிடாதிங்க.. என்ன கருத்தோ அதை பதிவு பண்ணுமாறு கேட்டு கொள்கிறேன்.. எழுத்து பிழை இருந்தாள் மன்னிக்கவும். இது ஒரு திரைக்கதைக்காக எழுதி வைத்திருக்கிறேன். அதை சுருக்கி இங்கு தந்திருக்கிறேன். ஆதரவு தருவீர் என நம்புகிறேன்...

எழுதியவர் : தவம் (20-Nov-14, 6:10 pm)
Tanglish : annpae thivyaa
பார்வை : 345

மேலே