ஐந்தாம்பூதப் பார்வைகள்
கச்சைப் பதுக்கல்களோ
கார்குழல்
கற்றைகளோ....
அவிழ்த்து நுகரத்தானே
அள்ளிக் கட்டச் சொல்வதெல்லாம்..?
என்னதான் வந்துவிடும்
அவைகள்.. அவைகளாகவோ
அலைந்தோ.. தவழ்ந்தோ
கொண்டிருப்பதால்......?
இங்கு ....
பஞ்ச பூதங்களின்
ஐந்தாவதாகவே பயணித்துக்
கொண்டிருக்கிறது
பெரும்பான்மை பார்வைகள் ...
நெருப்பாயிரு என
மொழிந்ததெல்லாம்...
மெழுகுச் சுடரொன்று
கவிழ்த்து... சாம்பல்
ஊதிப் பறத்தும்.. பெருமூச்சு
விடுத்தல்களாகவே....
நெடுமரக் கிளையொன்றின்
உச்சிக்கூட்டில் பீய்ச்சியடித்த
ஒளிக்கற்றை...
திடுக்கிட்ட
பறவைகளின் தூக்கம்
களவாடிச் சென்றிருக்கும்.....
எதிர்நோக்கும் ஒளிக்கற்றைகளில்
வெந்து தணிந்திருந்த
ஒவ்வொரு முறையும்
முந்தானைகளையோ...
துப்பட்டாக்களையோ சரிசெய்து
உறக்கம் தொலைத்த
பறவையாகிப் போகிறாள்
பெண்ணெனப்படுபவள்.......!!
படம் உதவி... முகநூல் நட்பு நிறம் வில்வம்...!!