வேலை இல்லா பட்டதாரி

தாயின் தாலியை அடகு வைத்து
பரம்பறை நிலத்தையும் விற்று தீர்த்து
நாங்களும் படித்தேன் பொறிஈயல் கல்வி
லட்சத்தில் என் பிள்ளை சம்பாறிபான் என்று
எங்கள் தாயும் சொல்லி திருந்தாள் அந்நாளில்!

இன்றோ ஆயிரம் ரூபா யாவது கிடைக்குமா என்று
அலுவலக வாசலில் நாய் போல் அலைகிறோம் நாங்கள்
மனம் தளராமல் இன்றும் தான் சொல்லி
திரிகிறாள் எங்கள் தாய் நாங்கள் லட்சத்தில் சம்பாரிப்போம் என்று!

பெற்றவளுக்கு தங்கத்தில் நகை எடுத்து போட
நினைக்க வில்லை நாங்கள்!
அவளுக்கு ஒரு நல்ல உடை எடுத்து
தர தான் வீளைகிறோம் நாங்கள்!
ஆசையோட புது அலைபேசி கேக்கும் சகோதரனுக்கு
ஆப்பிள் போன் வாங்கி தர
நினைக்க வில்லை நாங்கள்!
கைக்கு அடக்கமாய் ஒரு ஆயிரம் ருபாய்ஈல்
வாங்கி தர தான் ஆசை படுகிறோம் நாங்கள்!

ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
அவை கனவுகள் ஆகவே போகின்றன
எங்களுக்கு மட்டுமே தெரியும்
எங்கள் சம்பாத்தியத்தை வைத்து
எங்கள் செலவுகளை கூட
சரி கட்ட இயலாது என்று!

படித்து முடித்து வேளைக்கு வந்தும்
அப்பா விடம் கேட்கும் ஒரு ருபாய்க்கு
ஆயிரம் தடைவை யோசிக்கிறோம் நாங்கள்
என்று தான் மாறும் எங்கள் நிலைமை!

கண்ணில் கனவோடு
நெஞ்சில் வலியோடு
காத்திருக்கும் என் தாய்காகவாவது
நல்லாதோர் வேளைக்கு
நானும் போகனும்
கடவுளே கொஞ்சம் கண் பாரடா!

எழுதியவர் : (21-Nov-14, 12:22 pm)
சேர்த்தது : Narmatha
பார்வை : 88

மேலே