அஞ்சல

=============
அஞ்சல
============

சத்தமில்லாமல்
கை தட்டி கொண்டிருந்தது
என் இமைகள் ,

கருவிழியில்
உன் முகத்தை
பதிந்தபடி ,

கார் மேகம் சூழ்ந்த உன்
கூந்தலை என் விரல்கள் வருட
நினைத்தது ,

புவியிர்ப்பு விசை
இறுகி பிடித்து கொண்டது
உன் அருகில்
என்னை அனுப்பமால்,

நீ வாசல் தெளிக்கும்
நீரை சேகரித்து
நீராட விரும்புகிறேன்,

ஒவ்வொறு சொட்டு
நீரிலும் உன் கைரேகை
பதிந்திருப்பதால் ,

உன் தலையில் இருக்கும் வரை
எந்த பூவும்
வாடுவதில்லை ,

இறந்தவர்களுக்கு
அங்கே தான் உயிர்
கிடைக்கிறதாம் ,

உன்னை காதலித்ததால்
என்னவோ அழாத
என் கண்களும்
நீரை சிந்துகிறது ,

இது வருத்தத்தில் அல்ல
என் கண்ணீரும் உன்னை
காண விரும்பகிறது ,,,,,,,,,


என் அஞ்சல அவ .

எழுதியவர் : ரிச்சர்ட் (21-Nov-14, 12:00 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 119

மேலே