+நீயின்றி நானில்லை எப்பவுமே+

அலைவேன்
தனியாக
நினைவில்

வருவாய்
துணையாக
கனவில்

இருப்பேன்
எதற்கோ
வருத்தமாய்

சிரிப்பாய்
சோகம்போக‌
பொருத்தமாய்

தாகமாய்
தனித்திருந்து
தவித்திருப்பேன்!

மேகமாய்
மழைதந்து
குளிரவைப்பாய்!

வெளிச்சங்கள்
ஏதுமின்றி
இருண்டிருந்தால்

பிரகாச‌
முகம்கொண்டு
ஒளிரவைப்பாய்!

நீயின்றி
நானில்லை
எப்பவுமே!

உன்நினைவின்றி
நானில்லை
இப்பவுமே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Nov-14, 12:38 am)
பார்வை : 260

மேலே