காதலை உணர்ந்தேன்

♡காதலை உணர்ந்தேன்♡


♡♡♡முதல் முறை கண்ட பொழுது
காணாமல் போனேன்!
என் காதலியை!


நட்பினில் மலர்ந்த நினைவது என
நகைக்களானேன்!


உன் பார்வை எனும்
காந்தம் அது இவ்
இரும்பு தகடிதை
ஈர்த்தது!


வேண்டாம் என
விலக நினைத்தேன்!
விழிகளில் உந்தன்
நினைவது நீரென வழிந்தது!
உணர்ந்தேன் என் காதலை!


உறங்கும் வேளையில்
உறங்கா நிலவு!
உந்தன் நினைவது!
அத்தருணம்
உணர்ந்தேன் என் காதலை!


முயலும் முயற்சிக்கு
முன் உந்தன்
விழிகளை காணவேண்டும்,
என்று நினைக்கையில்
உணர்ந்தேன் உன் மீது
என் காதல்!


எழுதும் கவிதையினில்
எண்ணம் நீ என்றிருக்க
உணர்ந்தேன் என் காதலை!


உனைக் காணா நேரம்தனில்
மனம் கலங்கிய பொழுது
உணர்ந்தேன் என் காதலை!


மலரது காணும் பெழுது!
காதல் மலரது காணும் பொழுது,
உணர்ந்தேன் எந்தன்
மலர் உந்தன் நினைவினை!
என் காதலி நீயென!

எழுதியவர் : சந்தோஷ் (22-Nov-14, 2:26 pm)
Tanglish : kaadhalai unarthen
பார்வை : 110

மேலே