வாழ்த்தி விட்டேன் நான்

ஏழு வருஷம் காதலிச்சு
எழுதினேன் கடிதம் உனக்கு
எதிர் பார்ப்புகளுடன்.. ஏக்கங்கள்
எண்ணங்களாய் எழுதியே காண்பித்தேன்..

மணவறை காணலாம்
மாங்கள்யம் வாங்கலாம்
மங்களமாய் வாழலாம்
மனதார சேரலாம்..

எழுதினாய் நீயும் எனக்கு..உன்
எண்ணத்தை எழுத்தின் மூலம்
எப்படியாவது மறந்து விடு
என்னை என்று..

மாமன் மகன் இருக்கிறான்
மணந்து கொள்கிறேன் என்று
மறக்க முடியவில்லை..
மன்னிக்கவும் முடியவில்லை..

மாறிவிட்டாய் நீ இன்று
மாற மாட்டேன் நான் என்றும்
மறக்க மாட்டேன் உன்னை நான்
மறந்து விடு என்னை நீ..

மனதார காதலித்தேன் உன்னை
மானத்தோடு வாழ்வேன் கண்ணே
மணந்து கொள் நீ. உன் மாமன் மகனை
மனசார வாழ்த்துகிறேன் உன்னை... நான்..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Nov-14, 11:01 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 241

மேலே