கொலுசொலி

வரப் போகும்
மழையும்
வந்து போன
மழையும்
காகிதக் கப்பலின்
இடைவெளியில்
ஓய்வெடுக்கின்றன....
---------------------------------------

காற்றுக்கு
தலை தூக்காவண்ணம்
சட்டென
தரையோடு
அமர்ந்தவளின்
பாவாடையை
சுற்றி
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்....
----------------------------------------------

பாதங்களைத்
தொலைத்த
பாதையில்
திசையற்று நிற்கிறது
எனக்குள்ளே
யோசிக்கும் இசையென
உன் கொலுசொலி.....
-------------------------------------------------

கவிஜி

எழுதியவர் : கவிஜி (24-Nov-14, 12:31 pm)
Tanglish : kolusoli
பார்வை : 234

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே