என் தனிமையின் நொடிகள்
அவளின்
நுலிலை பார்வையில்
தடம் மாறிய
சில நாட்களில்
இருள் சூழ்ந்த
வெற்று அறைகளில்
கொட்டி கிடக்கும்
நிசப்தம்
குடிக்கொள்கிறது
இதய தூவரமெங்கும்
மனம் ஏனோ
தனிமைக்கு ஏங்கினாலும்
அவளின் நினைவுகள்
கொலை செய்து கொண்டே இருக்கின்றன
என் தனிமையின் நொடிகளை