என் அன்புத்தோழியே-சகி

அன்புத்தோழியே....
என்னைப்பற்றி கவிதை
சொல்லே என்று அன்பு கட்டளை
வைத்தாய் என்னிடம்...
கவிதைக்கு ஒரு கவிதை
எழுத சிந்திந்தேன் ...
முகம் அறியவில்லையடி கண்ணே ...
முகவரி நம் எழுத்து தான் இருவருக்குமே...
கவிதைகள் எழுதுவதில்
கெட்டிகாரி நீ....
வாழ்வில் நீ கடந்த
பாதை முட்கள் தானடி...
இனிவரும் உன் பாதை
உன் எண்ணம் போல் மலர
வேண்டுமடி மங்கையே...
உன் ஆறுதலான வார்த்தைகள் ...
கள்ளமில்லா எண்ணங்கள்....
மனதில் பட்டத்தை வெளிப்படையாக
சொல்லும் மனம்...
வலிகளை அனுபவ பாடங்களாக
கற்றுக்கொண்டாய் ..
வாழ்வில் முன்னேற
முயற்சி செய்து இன்னல்கள்
பல கடந்து வளர்ந்து வருகிறாய் ...
தோழியே...
நம் நட்பு தொடர
வேண்டுமடி என்றாய் ...
நிச்சயமடி பெண்ணே
தொடரும் என்றுமே...
நம் கவிகளுக்கு
முற்றுப்புள்ளி உண்டோ ?
பிறகு ஏது நம் நட்பிற்கு
முற்றுப்புள்ளி ....
கடக்கும் பாதையில்
பல திசைகள் வரும்...
நல்ல பாதை
நம் கையில் மட்டுமே...
முயற்சி என்று எண்ணி
விடாமுயற்சியுடன் பாதையை
கடந்து வாடி பெண்ணே...
வாழ்க்கை பயணம்
என்றுமே உனக்கு வசந்தம்
தானடி பெண்ணே...
நம் பிழைகள்
நமக்கு ஆசானடி ...
வாழ்க்கை ஓடம்
வழி மாறி செல்லாமல்
இருக்க உதவும் நம் நட்பெனும்
பாதை தொடரட்டுமடி ...
வாழ்க்கை பாதை
சுழன்று கொண்டே இருக்கும்...
நாமும் சுழலுவோம்....
பல வெற்றிகளை
காண வேண்டுமடி நீ....
வாழ்த்துகிறேன் தோழி...
அனைத்து வளங்களும்
நீ பெற்று நலமுடன் வாழ...
(என் அன்புத்தோழி யாழுக்கு சமர்ப்பணம்)