அவள் வருகிறாள் ஜாக்கரதை - வேலு
இரவு ஆனாலே அவள் தொல்லை
அங்கும் இங்கும் நோட்டம் விடுவாள்
அப்படி இப்படி பார்த்து
யாரும் பாக்காத நேரத்தில்
மெதுவா என் காதோரம் வந்து எதோ பாடுவாள்
விளக்கணைத்ததும் போர்வைக்குள் புகுந்து
ஒரு கடி கடித்தாள்
முதலில் விலக்கி விட்டேன்
இரடாவது முறையும் என்றால் ?
ஐயோ அலறிய படி
ஒரே அடி - பாவம்
என் இரத்தத்திற்கு வாங்க வந்த நேரத்தில்
அது இரத்தம் சிந்தியது என் போர்வைக்குள்ளே
அந்த கொசு !!!