தலைக்கு வந்தது

ஊர் ஊராய் திரியும்
தருக்குடையோன் ஒரு புலவன்
தமிழ் மன்னன் சபை நாடி வந்திட்டான்..
செருக்குடன்
நிமிர்ந்து நோக்கினான்
நாடாளும் காவலனை

என் தமிழுக்கு முன்
நீ சிறு துரும்பு
அதனால் நீ எனை வணங்கு..
என்றதால் தமிழை
வணங்கும் முகத்தான்
அரசனும் அவனை மதித்தான்
சபையினர் நடுவே சலசலப்பு
அரசனும் மதி இழந்தான்
என்றே அவருள் முணுமுணுப்பு!

பரிசில் தந்தே தேரேற்றி
புலவனை அனுப்பி வைத்திட
ஆணையிட்டான் ..அரசனவன்
அகமகிழ்ந்தே..!
பின் அவைக்குப் புகன்றான்
அவன் கருத்தை..

புலவன் நாவே ஆயுதமாய்
நச்சுப் பேச்சே அரவின் பல்லாய்
தலைக் கணத்தின் சுமையால்
பேசிவிட்டான்..அந்தோ..
தாய் தமிழின் புடவைக்குள்
ஒளிந்து வந்தான்..
தமிழ் சேலை நீக்கி
துன்புறுத்த நானும்
துச்சாதனன் ஆகுதல்
முறைதானோ!
தலைக்கனத்தை
சுமந்தவன் தலைதனை
தாய்த்தமிழே காத்ததென்று
அரசனும் கூறி நகர்ந்தான்
அங்கிருந்து !

எழுதியவர் : கருணா (25-Nov-14, 9:13 am)
Tanglish : thalaiku vanthathu
பார்வை : 316

மேலே