மாசில்லா நட்பு

மனதில் தோன்றும் எண்ணங்களே
மாசற்று தோன்றகூடாதா ?
மனிதம் என்ற புனிதத்தை
மறந்து வாழும் மனிதர்களே ,
மாசுபட்ட எண்ணங்களை
துறந்து வாழப்பழகுங்கள் ...
நாட்டை சுத்தப்படுத்தும் முன்
நம் நாவை சுத்திகரிக்க வேண்டும் ...
நாட்களை கடத்தி வந்தால்
நாடும் வீடும் நலமாக இராது !
நல்லனவற்றை நினைப்போம்
நல்லதையே செய்வோம்
நட்பாக இருப்போம் !!!