பாலியல் வன்கொடுமை

பிறந்து பூமியின் தடம்
பதிக்கும் முன்னே
போரட ஆரம்பித்து
விடுகிறார்கள்....பெண்கள்

சிசுவாய் அவதரிக்கும்
பெண் குழந்தைகளுக்கு
கருச்சிதைவும்..கருகலைப்பும்
பெண் சிசு கொலையுமே
முதல் எதிரியாய்
அறிமுகம் ஆகிறார்கள்...!

போதைக்கு அடிமையாகி
பெயர் போன இந்த உலகில் பெண்களை போதையின்
உச்சமாகவே மிச்சப்படுத்தி
கொச்சைப்படுத்தி
வைத்திருக்கிறார்கள்...!

பெண்களின் அறியாதவயதிலே
இந்த உலகத்தின் கழுகும் நரியும் வேட்டையாட பெண்மைகளை
குறிவைக்கறது.....!

ஏரியாவில் படரும்
கண் மேய்சல்களும்
கல்விகூடத்தில்
விரல் தடவல்களும்
கல்லூரிகளில்
விஷசம சீண்டல்களும்
வேலை இடங்களில்
அத்துமீறல்களும்
பொது இடங்களில்
மார்கழி நாய் போன்ற
வெறித்தனம் நிறைந்த
மனிதர்கள் தான்
பெண்மையை கலங்கப்படுத்தும்
கயவர்கள்....

தன்னை ஈன்றவளும்
தன் சதையின் சகோவும்
தன் கருவை சுமப்பவளும்
பெண் என்பதை மறந்த
மானங்கட்ட ஈனபிறப்புகள்

எத்தனை இன்னல்கள்
எவ்வளவு பார்வைகள்
கேட்க இயலாத பேச்சுகள்

மிருகங்கள் மனித வேஷசம்
தரித்து வாழ்வது இந்த
உலக காட்டில் மட்டுமே
தடுக்கவும் தட்டிகேட்கவும்
நாதியற்ற சட்டமும்
அதன் காவலர்களும்....

இப்படிக்கு...,
பெண்மை தீயில் கருகுவதை
வேடிக்கை மட்டுமே
கைகட்டி பார்க்கும்
கையாள்யற்ற சரசரி மனிதன்

ஃதங்கம்

எழுதியவர் : தங்கம் (25-Nov-14, 10:20 am)
பார்வை : 2843

மேலே