புதுவாழ்வு நல்ல மணவாழ்வு
ஏனெக்கென பிறந்த என் தேவதையே
ஏன்னை தாலாட்டும் கவித்தென்றலே
உன் புன்னகையுடன் காலை விடியும் நல்வேளை
தேநீர் பருகும் இதமான காலை
என் கன்னில் உந்தன் பார்வை
ருசிக்கும் தேனீருடன் உனை ரசித்தேன்
நடக்கும் என் ஒளிச் சிற்பமே!
தேநீரின் தேன் சுவையோ - உன்
முந்தானையில் தவழும் தென்றலோ
மாசற்ற உன் கண்களின் ஈர்ப்பலையா
செல்லம் கொஞ்சு உன் உதடுகளா
எதைக்காண ஆவல் கொண்டேனோ
என்மனம் இங்கில்லை உன்னாலே
சறுக்கிடுதே என்மனது தன்னாலே
இடையில் ஆடும் உன்கூந்தலின் வாசம் என்னை இழுக்குதடி
ஆடையால் மறைக்கப்பட்ட என் கலைக்களஞ்சியமே
கூந்தலில் இடம்பிடித்த பூக்களுக்கும் நேசம்வரும்
உன் பால்போன்ற கன்னம் உரசும் காதணிக்கும் காதல்வரும்
அழகிய பதுமையே கண்ணிமைக்கும் கோபுரமே
தேடும் உந்தன் கண்களில் நான் தொலைந்திடவா
தேடலின் சுகத்தை நான் உனக்கு காட்டிடவா ?
உன் செய்கையை நான் ரசித்திருப்பேன்
என் சோகம் நாம் மறந்திருப்பேன்
நான் உன்னை ரசித்துவிட்டேன் - பேரழகே
உன் அழகினை விரல்களால் வரையவா?
இல்லை என் இதழ்களால் வரையவா?
தமிழாய் வரைந்தேன் உனக்காக ஓர் மடல்
மனைவிக்கு ஓர் காதல் ஓவியமாய்.
எழுதிய வரிகளை நீபடிக்க - உன்
புன்னகைக்கும் உதட்டை நான் படிக்க
பாயும் வெட்கம் முகத்தை மறைக்க
வியப்பில் விரியும் உன் விழிகளை
கண் இமைக்காமல் ரசித்திருப்பென்
என் விழியால் உன்னை களவாடி
என் உள்ளச்சிறையில் உனை அடைப்பேன்
உன் நெற்றிப்பொட்டாக உன் நெற்றியில்
ஒட்டி உறவாடி உன்னுடன் நான் சேரவா
விழியோடு புதிய வாழ்வு இன்று உதயமானது
என் அன்னைக்கு ஒருமகளாக நீமாறி
அகம்மகிழ வாழவைப்பேன் நானுன்னை
அன்னைக்கும் தந்தைக்கும் பனிவிடைகள் நீசெய்ய
ஊன்னொடு நானுதவும் அவ்வேளை சிறந்திடுமே.
பெற்றவர்கள் ஆசியுடன் சிறப்பான வாழ்க்கையில்
கண்களில் சிந்திய நீர் ஆனந்த கண்ணீராக மட்டும்
வாழ்வில் ஆனந்தம் சிந்தக்காண்போம்
தினமும் புதிதாய் வாழ்வோம் - உன்
புன்னகையுடேன் என் தோளில் முகம் பதித்து
மகிழ்ந்து நாம் சேரும் அந்நேரம்
இவ்வுலகை நாம் ஆள்வோம்
புரிதல்கள் கிடைத்துவிட்டால்
பிரியாத என்னுள் நீ நுழைந்தால்
பிரிதலுக்கு இடமில்லை
என்றும் இணைந்திருப்போம்
நம்மில் நாம் கலந்திருப்பொம்
சோகமின்றி வாழ்வோம்
சொர்கத்தை காண்போம்...