சேராதே

பரந்த வானில்
விழுந்த ஓட்டைகள்
பள்ளங்களிலேயே
வாழ விரும்பும்
உள்ளங்கள்
தீவாய் இருப்பதற்கே
தோன்றியவர்கள் ...
உலகத்து மாந்தரை
வெறுப்பவர்கள் ..
உன்மத்தம்
உடைமையாய்க்
கொண்டவர்கள் ..
பலர்!
அன்பே..
நீயோ சோலை
நிழல் தரும்
அழகிய வனம்
நீ இந்தக்
கூட்டத்தில்
சேர்ந்து விடாதே !

எழுதியவர் : கருணா (25-Nov-14, 9:36 pm)
Tanglish : seraathey
பார்வை : 327

மேலே