மாதுவிடம் மயங்கினேன்

மாதுவிடம் மயங்கினேன்!!!

வாழ்க்கை என்னும் படகில்
ஏறி அமரும் போது
தேவைகள் அதிகம் என
கருத்தில் கொண்டு
கட்டிய மனைவியை
கண் கட்டி காட்டில் விட்டது போல்
திரை கடல் தாண்டி
திரவியம் தேட வந்தேன் நான்
வந்தது என் வாழ்கையில்
வசந்தம் வசதி எல்லாம்
ஒன்று கூடியது.. என்னிடம்...
அத்துடன் ஒரு மாது வந்தாள்
என்னிடம்..கண் கட்டி விட்டு
வந்த என் மனைவியை மறந்தேன்
இந்த மாதுவிடம் அடிக்கலாம் ஆனேன்
கண் கட்டி விட்டவள்
அப்படியே இருக்கிறாள்
இந்த மாது என் செல்வத்தை
எல்லாம் அள்ளி சென்றாள்..
என்ன சொல்வேன் கட்டியவளுக்கு...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (26-Nov-14, 10:37 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 69

மேலே