வீர வணக்கம்

ஒரு வீரன்
ஒரே வீரன்

வல்வெட்டித்துறையில் பிறந்தவன்
பத்தாம் வகுப்பு மாணவன்
பதினெட்டாவது வயதில் தலைவன்
முப்பது வருட ஆதிக்கம்
தனி மனிதனின் போராட்டம்

"வேலுப்பிள்ளை பிரபாகரன்"
இவன் ஒரு தனி மனித ராணுவம்

இயற்கை எனது நண்பன்
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்
வரலாறு எனது வழிகாட்டி
இது இவன் கூரிய கூற்று

நாட்டிற்காக
போராடியவன் அல்ல
ஜாதிக்காக
போராடியவன் அல்ல

தமிழனுக்காய் போராடியவன்
ஈழத் தமிழனுக்காய் குரல் கொடுத்தவன்

இவன் சுயநலவாதி அல்ல
காரணம்
இவன் போராடியது
பொதுநலத்திற்காக

முட்டாள்கள் அதை
சுயநலம் என்றார்கள்

இவன்
சீர்த்திருத்தவாதி அல்ல
ஆனால் எல்லாம் சீராக்கப்பட்டது

இவன் தீவிரவாதி அல்ல
போராளி
இவன் பயங்கரவாதியும் அல்ல
இருந்தும்
சிங்க(ம்) ளம் இவனைக் கண்டு
பயந்தது

உலக சரித்திரத்தில்
இவன் பெயர் எழுதப்படவில்லை
இவன் பெயரில் தான்
பல சரித்திரங்கள் எழுதப்பட்டது

நாளை மாவீரர் நாள்
இன்று ஒரு மாவீரனின் பிறந்தநாள்

செய் அல்லது செத்து மடி என்றான்

இவன் செய்தான்
என்று உலகம் போற்றியது

மடிந்தான்
என்று
காலச் சுவடுகள்
எழுத மறுத்தது

கிட்லருக்கும் தொடை நடுங்கும்
இவனோடு முட்டி மோதினால்
தமிழா
நீ அச்சம் தவிர்
இவன் பெயர் சொல்ல விரும்பினால்


வீர வணக்கம்





வீர வணக்கத்துடன்

பெருமையோடு
ஏனோக் நெஹும்
..........................................................................................................................................






அவர் கூரிய ஒரு கூற்று

"எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."

உலகம் முழுவதும் தமிழர்கள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்

இதோ இக்கவிதை அவருக்கு சமர்ப்பணம்.

எழுதியவர் : ஏனோக் நெஹும் (26-Nov-14, 11:51 am)
பார்வை : 1060

சிறந்த கவிதைகள்

மேலே