உயிரும் நீயே உலகமும் நீயே
அன்பே,
உன்னை,
என் உலகமே என்று சொல்ல நினைத்தேன்.
இன்று,
என் உயிராக மாறி போனது
ஏனோ!
என்
உலகம்
நீ என்றால்,
உன்னை வெறுத்து உலகமே வேண்டாம் என்று
ஒரு மூலையில்
முடங்கி இருப்பேன்.
உயிரே,
நீயானதால்
உதிரத்தில்
கலந்து , உயிரோடு துடிக்க வைக்கிறாய்.