விந்தை மனிதனுக்கு விண்ணப்பம்

ஒவ்வொரு நாளும் ஒரு விந்தை
மனிதனால்....
உலகம் சுருங்கிப்போனது உள்ளங்கையளவு!!!

சன்னலுக்குளே சந்தைக்கடை!!!
வாங்கவும் விற்கவும் தள்ளுபடி..

வீட்டிற்குள்ளே திரையரங்கு!!!
வேளையொரு காட்சி நாள் ஒரு திரைப்படம்...

இங்கிலாந்து பெண்ணோடு காணொளி காதல்!!!
இந்தியாவில் இருந்துகொண்டு...

கைபேசியின் ஒரு அழைப்பு
விட்டின் வாசலில் உணவுக்கடை!!!...

மாடிக்கு நான் போக..
படிகள் நடக்குது எனக்காக!!!...

துவைக்க ஒரு கருவி!!...
சமைக்க ஒரு கருவி!!...

நேற்று சமைத்த மீன்க்கூட
கெடாமல் காக்குது ஒரு கருவி!!!!.....

வளர்ந்து வரும் தொழில்நுட்பம்
எளிமையானது என் வாழ்க்கை..

என மார்தட்டிகொள்ளும் மானிட பதர்களே..
உங்களிடம் ஒரு கேள்வி .....

ஏன்?? இல்லையொரு கருவி என் கழிவுகளை நான் நீக்க?
இந்த தொழில்நுட்ப வளர்ச்சியில்???....
உண்டு என்றது உள்ளுணர்வு
யாரென்று வினவினேன்...
மனிதன் என்றது பதிலாக...

வளர்ந்துவிட்ட தொழில்நுட்பத்தில்
வேதனை அளித்தது இச்செய்தி
மலத்தை எடுக்க மனிதனா?

நித்தம் நித்தம் சிந்திக்கும்
என் விந்தை மனிதா!!(விஞ்ஞானி)
உனக்கோர் வேண்டுகோள்...

சீக்கிரம் வேண்டும் ஒரு கருவி
மலத்தை எடுக்கும் என் மனித நண்பனுக்கு மாற்றாக!!!!.....


விண்ணப்பதாரர்,
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்.

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (26-Nov-14, 12:14 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே