யார் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
உறங்கப் போனவன்
எழுந்து சென்றான்..
இருளில்.
வானத்திலிருந்து
ஓர் ஜ்வாலை..
முன்னேறினான்..
பிரளயமாய்
ஒளி வெள்ளம்
சூழ்ந்தது அவனை..
உடலும்
இறக்கை போல் ஆகிட..
மெல்ல மெல்ல
தரையிலிருந்து
யாரோ அவனை
மேலே எழுப்பி
பறக்க வைத்தார்கள்..
ஒரு கதவு..
வாயிலில் சேவகன்..
யார் நீ ..
கேள்விக்கு
பதில் உள்ளே சென்று சொல்கிறேன்..
என்னை
அழைத்துப் போ..
என்றவனை
சேவகன்
உள்ளே கொண்டு சேர்த்தான்..
இவன் கேட்டான்..
அங்கே உட்கார்ந்திருந்த
ஏதோ ஒன்றிடம்..
உன் முகத்தைக் காட்டு
என்றான்..
தெரிந்தது
இவன் முகமே !
அது சிரித்தது..
அப்பா..
நீதான் நான்
நான்தான் நீ..
திரும்பி வந்து
படுக்கையில் படுத்து கொண்டான்
அவன்!