ஒரு பச்சை புறா
திண்ணையில்
அழகாய்
ஒரு பச்சை
புறா!
பச்சை புறா ??????????
காண அரிதென்று
நினைத்து
படம்
பிடிப்பதற்குள்
பறந்துவிட்டது!…
புண் முறுவல் இட்டு
என் தலை தட்டினேன்!
புறாவை பறக்கவிட்டதர்க்காக
இல்லை
என் முகத்தில்
பச்சைக் கண்ணாடி
என்பதனால்!….