மழையோடு மணனம் சேர்ந்து

..."" மழையோடு ம(ண)னம் சேர்ந்து ""...

இன்னிசை முழங்கி நீ
வரும் வார்த்தை முன்னே
மின்னலிடம் சொல்லிவிட
உள்ளம் மகிழ்ந்து உன்னை
பூமிக்கு வரவேற்க மரங்கள்
கையசைக்கும் எம் மனமோ
குதூகலிக்கும் உன் வரவினை
ம(ண்)ணம் வீசி பறையடிக்கும்
பரந்துவிரிந்த உலகிற்கு உன்
விரல்தொட நாணித்து பூக்கள்
நிலம்நோக்கி தலைசாய்க்கும்
உன் வருகையின் சிலிர்ப்பிலே
சிறு கதைகளும் கவிதைகளும்
பிறந்துவரும் உன்னோடு நனைந்து
மண்ணோடு குதித்து கண்ணோடு
வழியும் கண்ணீரை கரைத்து
உள்ள(க்)கவலைகள் மறந்தே
மனம் பாட்டுப்பாடும் மழையே நீ
பூமிக்கும் வானுக்கும் உறவுப்பாலம்
அளவோடு நீ இருந்துவிட்டால்
அழகிய ஆனந்தம் ஆத்திரத்திலுன்
மடை திறந்தால் அளவில்லா
தின்னாட்டம் மழையே மழையே
மண்ணை தொடாதிருந்திருந்தால்
கன்னி வெடிக்கா மலடியாய் கருகி
காய்ந்து மாண்டுபோயிருக்கும்....

என்றும் உங்கள் அன்புள்ள,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (27-Nov-14, 10:20 am)
பார்வை : 80

மேலே