கதம்ப சோறு செஞ்சு தரவா மாமா

அரிசி
துவரம் பருப்பு
உளுந்தம்பருப்பு
கடலைபருப்பு
தக்காளி
வெங்காயம்
புளி
மிளகாய்
மல்லி
மிளகு, சீரகம்
பெருங்காயம்
தேங்காய்
காராமணி
கேரட், பீன்ஸ்,
சேனை,
கிராம்பு, கடுகு, கருவேப்பில்லை...................
இத்தனையும் போட்டு கதம்ப சோறு செஞ்சு தரவா மாமா...
என்ன கட்டி கிட்டா ருசி பாக்கலாம் மாமா....

அரிசி,பருப்பு,தக்காளி,வெங்காயம் அதனையும் வேகும் நேரம்
மிளகு,மல்லி,சீரகம்,மெளகாய் இதை எல்லாம் பொடியாக்க வேணும்....

கடுகு,உளுந்து,கரிவேப்பில தாளிச்சு முடிக்க
அது கூட காய் ஏலம் போட்டு வணக்கிடலாம்....

வேக வெச்ச அரிசிய உளுந்து கலவைய இது கூட நா சேர்த்து
புளிகரசல் நெய் கலந்து மணமணக்க தர போறேன்....
அவர் மனசுக்குள்ள வர போறேன்....

வந்துட்டாரு என் மாமனும் நம்ம தளத்துக்கு.....
இனி புது வாசம் கெடைக்கும் பார் என் எழுத்துக்கு.....

எழுதியவர் : சந்தியா பிரியா (27-Nov-14, 10:22 am)
பார்வை : 214

மேலே