தோல்காப்பியம்

பேருந்தில் அடித்து பிடித்த
இருக்கை இரவல் போகிறது

சினிமா போஸ்டரிலும் சரி
சலிக்க வைக்கும் விளம்பரங்களும் சரி

கல்லூரிகளின் தரக் குறியீடுகள்

நெரிசலே இல்லாத
கூட்டங்களிலும்
செயற்கையாய்
உண்டாகும் உரசல்கள்

ஆறுமுதல் அறுவது வரை
யாவரையும் ஒன்றாய் பிணைக்கும்
விஷயம் ..............,

எல்லாம் "வெள்ளை" தாளில் மட்டும் எழுதப்பட்ட
"தோல்"கப்பியங்களுக்காக ...........,

எழுதியவர் : haathim (27-Nov-14, 3:23 pm)
பார்வை : 240

மேலே