நாளை நமதே

என்னடா அடிக்கடி நாளை நமதேன்னு பாட்டுப் பாடற?

டேய் எங்க அபிமான நடிகர் கட்சி ஆரம்பிக்கப் போறார். தமிழ் மக்களைப் பத்தித் தான் ஒலகத்துக்கே தெரியுமே. சினிமாக்காரங்க என்ன சொன்னாலும் கேப்பாங்க. எங்க கட்சி தேர்தல்ல நின்னா கட்சிக்கு பாடுபட்ட ரசிகர்களுக்குத் தான் தேர்தல்ல நிக்க சீட் கெடைக்கும். மாவட்ட ரசிகர்மன்ற தலைவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆகிறது உறுதி. நானும் வடக்கு மாவட்ட ரசிகர் மன்றத் தலைவரா இருக்கறதாலே கண்டிப்பா எனக்கு அமைச்சர் பதவி கெடைக்கும். அதனால தான் நாளை நமதேன்னு இப்பவே பாடறேன்.

எழுதியவர் : மலர் (27-Nov-14, 4:34 pm)
Tanglish : naalai namathe
பார்வை : 237

மேலே