கண்ணீர் துளிகள் - சகி

????கண்ணீர் துளிகள் ????
என் கண்ணீர் துளிகளின்
மதிப்பை உணர்ந்தும்
தினம் தினம் சிந்துகிறேன்...
என் வாழ்வின் சில
தவறுகளை எண்ணி...
உண்ணும் உணவும்
உப்பாகிறது என் கண்ணீரால் ...
அழுவது அன்றி எனக்கு
ஆறுதல் எதுவுமில்லை ...
உண்மையற்ற உறவுகள் ..
முகமூடி அணித்து கொண்டே
உறவாடுகிற சில உறவுகள் ...
வலிகளை உணரும்போது
உணர்கிறேன் உண்மை என்னவென்று ...
கிறுக்கிக்கொண்டே இருப்பேன்
என் வலிகளை எண்ணி ...