என் உயிர் நண்பனின் வாழ்த்து மடல்-சகி

என் உயிர் தோழியே....
என்னிதயத்தில் இனிப்பவளே
நம்முறவின் பெயர் உயிர் நட்பு ....
சட சடவென மழை பொழிய
ஒரே குடைக்குள் இருவரும் ..
உன் தோள் சாய்ந்து நான் நடக்க
என் கை பிடித்து நீ நடக்க
சில்லென்ற ஓர் சாரல்
நட்புச்சாரல்....
எண்ணங்கள் சிறியது தான்
அதனுள் நம் நட்பினைவதால்
பொக்கிஷமாகிறது...
உன் மடி என் தாய் மடி
உன் மடிமீது என் கனவை
புதைக்கிறேன்....
அவை நல்லவை என்றால்
கை குழிக்கி வழிக்காட்டு ...
தீயவை என்றால் திட்டியனுப்பு
திருத்திகொள்கிறேன்...
நித்தம் நித்தம் உன்னை
வணக்குகிறேன் ...
வணங்கி விழுவேன் உன் பாதம்
தொட்டு எழுவேன்....
மனிதன் இறப்பதற்கு
என்றே படைத்தான்
இறைவன் ....
இறப்பதற்குள் உன்னைப்போன்ற
ஓர் உயிரான தோழி குடியேறியது
நான் செய்த புண்ணியம்....
உன் ஒவ்வொரு பிறந்தநாளன்றும்
ஏதேதோ செய்ய நினைக்கிறேன்
முடியவில்லையடி....
நான் இறப்பதற்குள் நினைத்தது
அனைத்தும் செய்து முடிப்பேன்
நிச்சயம் என்னுயிர் தோழி
உனக்காக....
இன்று சொல்கிறேன் குறித்துக்கொள்...
என் மனைவியின் மடியிலோ ...
என் அன்னை மடியிலோ என்னுயிர்
பிரியக்கூடாது ...
உன் மடி மீது மட்டுமே என்
உயிர் பிரியவேண்டுமடி சகி ....
இன்று பிறந்தப்பூ போல்
காலையில் விடியும்
விடியல் போல் என்றென்றும்
மகிழ்ச்சியோடு நீ வாழவேண்டும்...
பணத்துக்காக மட்டுமே படைக்கிறான்
உறவுகள் அனைத்தையும் ...
அன்பிற்காக மட்டுமே படைக்கிறான்
ஒரே ஒரு உறவை நம் நட்புறவை ..
நம்மை இணைத்த நம் நட்பிற்கு
என் உயிர் கனிந்த வணக்கமடி தோழி...
மாற்றங்கள் மட்டுமே புதியதை
உருவாக்கும் என்பதை உன்னால்
கற்றுக் கொண்டேனடி ....
சிரிப்பில் துன்பங்களை
சிதறடிக்கும் வித்தை
தெரிந்தவள் நீ....
உன் வாழ்வில் உனக்கென்று
நீ அமைந்த புதிய பாதை
எந்தவொரு தடங்கலும் இல்லாமல்
இலக்கை சென்றடைய வாழ்த்துக்கள் ...
நம் நட்பு உயிர்பெறும்
நம் உறவில் ..
காலங்கள் நம்மை பிரித்தாலும்
கண்ணீர்கள் நம்மை கரைத்தாலும்
நம் மனதிற்குள் எப்பொழுதும்
அழியாத நினைவுகளாக
இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கும்
நம் நட்பு...
என்றென்றும் உன் நினைவில் வாழும்
உன் உயிர் நண்பன் ...
****அழகு ***