ஊஞ்சல்
பிறந்தவுடன்
தாலாட்டியது தொட்டில்
ஊஞ்சலில் அமர்ந்தால்
தொட்டில் ஞாபகம்
மறந்துபோன பழைய சுகம்
முன்னும் பின்னும்
அசையும் போது
சிறகு முளைத்த பறவையாய்
உணரவைக்கும்
விஷ்.... விஷ் ... என்ற
காற்றின் ஒலி
கைதேர்ந்த கலைஞனின்
புல்லாங்குழல்
தரைதொட்டு மேலெழும்ப
நுரையீரல் நிரப்பும் காற்று
ஒவ்வொரு செல்லிலும்
பரவசம்
ஆலமரத்து விழுதுகளில்
ஆடிய ஊஞ்சல்
அரண்மனை வீட்டில்
சிறையிட்ட போதும்
உன் சிரிப்பொலி
குறையவில்லை
அவசர உலகில்
அலையும் வாழ்வில்
ஊஞ்சலுக்கு சற்று
நேரம் ஒதுக்கியதால்
உயிர் வாழும்
குழந்தை மனம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
