தொலைந்தது என் கிராமம்

ஒத்தையடி பாதையெல்லாம்
ஓரங்கட்டி
தார் சாலையாச்சு
தரங்கெட்ட பொருளாலே...!

அத்தி மரமெல்லாம்
வாய் பொத்தி நிக்கிது...!
வாய்வு குழாய் பதிக்க
வயல்காட்டில்
வாய்க்கால் தோண்டுகையிலே...!

கிராமத்து ஜனங்களெல்லாம்
கண்கட்டி நிக்கிது...!
களத்துமேடேல்லாம் வளைச்சு
கார் செய்ய
கட்டிடம் கட்டுகையிலே...!

எரி குளம் எல்லாம்
துந்துடுச்சு...!
நாரை கொக்கெல்லாம்
காணலேயே...!
ஆறலை என் மனம்
அதை பார்த்து...!

பொன்னான மண்ணெல்லாம்
பொண்ணுங்களை
குறை சொல்ற மலடாச்சு...!
பூவாட்டம் பொறக்குர
தாமரையேல்லாம்
தண்ணில்லாம தள்ளாடுது...!

ஆத்தங்கரை ஓரத்திலே
பூத்திருந்த பூவெல்லாம்
தலைகுனிஞ்சி நிக்குது...!
தரங்கெட்ட மனுசனுங்கோ
கரையோரம் மலம் கழிச்சதாலே...!

மூணு போகம் விளைஞ்ச
நிலமெல்லாம்
முன்னூறு மனையாச்சு...!
கதிர் அடிச்ச களமெல்லாம்
கட்டம் கட்டி
கபடி ஆடுகிற நிலமாச்சு...!

வட்டிக்கு மேல வட்டி வாங்கி
குட்டிகர்ணம் போட்டாலும்
வாடித்தான் கிடக்குது வெள்ளாமை...!
சட்டி ஏந்தி
தெருவுக்கு வந்திருவோமுன்னு
தவிக்குதுங்க
தள்ளாடும் பெருசுங்க...!

மீசை முளைச்ச
நாளுலேயிருந்து
நண்பன் முனுசாமியை
பாக்க போனா....!
மொத்தையா பூட்டு
தொங்குது முகப்புலே...!
மூட்டை முடிச்சு கட்டி
மும்பைக்கு அவன் போய்...!
மூணு வருஷம்
ஆச்சுன்னாங்கோ...!
முச்சந்தியிலே நின்ன
மூணுபெருங்கோ...!

ஏர் புடிச்சு ஏத்தம் புடிச்ச
இளவட்ட கைகள்
கலப்பையை புடிக்காம....!
நேத்து வந்த கட்சிக்கு
கொடி பிடிக்குது
கோஷம் போடுது...!
கோழிக்கால் புதைஞ்ச
கால் பிளேட்டு
பிரியாணிக்காக...!

மேட்டுத்தேருவிலே மேளசத்தம்
என்னான்னு பார்த்தா
அது பரமோளசத்தம்...!
ஆறேழு ஆம்பிளைங்க
ஆடுறாங்க...!
அரசாங்கம் விக்கிற
அயல்நாட்டு சரக்கை
ஊத்திகிட்டு...!

படிச்ச பள்ளிகூடம்
பாழாக்கிடக்கு...!
பாழாபோனவங்க
பத்து பேரு கிடந்தானுங்க
அதுக்குள்ளே...!
பதிமூணு சீட்டை புடிச்சுகிட்டு
பலானதை பேசிக்கிட்டு...!

கணக்கு வாத்தியார்
கண்ணெதிரே வரார்ன்னு
வணக்கம் வைச்சேன் அவருக்கு...!
பதிலுக்கு வணக்கம் வைக்கலே....!
அப்புறம்தான் புரிஞ்சுது
கைக்கும் காதுக்கும்
நடுவிலே கைபேசி இருந்ததுன்னு....!

பெத்தபெருக்குதான்
பொறந்தகிராமன்னு பேரு
போய்பார்த்த
பட்டணம் தான் ஜோருன்னு....!
பத்து மணி பஸ்சை புடிச்சேன்
பதுசா வந்து சேர்ந்தேன்
வேணாமுட பொறந்த ஊருன்னு....!

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (28-Nov-14, 7:04 pm)
பார்வை : 125

மேலே