இயற்கையின் வழி ------லெனின்

--மழை---
வளைந்து கிடந்த வானம்
சுழன்று கிடக்கும் பூமியை
நீர்க்கரம் கொண்டு
தழுவியது மழையாய்
கண்ணாடி துளிகளாய்
கழன்று விழுந்தது
கடந்து போன மேகம்
பட்டினியாய் கிடந்த பூமி
பருகி படித்தது ஒரு கானம்
பருவம் அடைந்தது
மழைக்காலம் என
புருவம் நிமிர்த்தியது
பூக்களால் மரங்கள்
முடங்கி கிடந்த நத்தையும்
சுருண்டு கிடந்த அட்டையும்
உடல் சோம்பல் முறித்து
திடல் தேடியது
வறண்ட நிலம் இப்ப
வழுக்கும் நிலமாச்சு
புழுதி கிடந்த இடத்தில் இப்போ
பூக்கள் விழி திறந்தது
வரம்பு கட்டனும்
வாய்க்கால் வெட்டனும் என
வெள்ளை தலை கிழவர்
இப்போ வாலிபர் ஆனார்
அடுப்பினில் இனி நெருப்பிருக்கும்
என பொறுப்பாய் இறங்கினர்
மழையில்