சிறகின்றி விண்ணில் பறந்தேனே

எனது பெயரை நீ
உச்சரிக்கையில்
மெல்ல வெட்கம்
வந்து எட்டிப்
பார்க்கிறதே
நட்பிற்குள் என்றும்
என் நண்பனாகவும்
என் கவிதையில்
என்றும் வாழும்
நேச உறவாகவும்
என் நினைவில்
புத்துணர்வு தரும்
தென்றலாகவும்
என் வாழ்வில்
வந்த ஒரே நட்பு
வசந்தமாகவும் நீயே
காலம் கனவோடு
முடிந்து விடும்
என்று கலங்கின
எனக்கு கருணை
கொண்ட உன்
இதயம் காதலை
தந்ததும் மண்ணில்
வீழ்ந்து கிடந்த
நான் சிறகின்றி
விண்ணில் பறந்தேனே....

எழுதியவர் : உமா (30-Nov-14, 12:03 am)
சேர்த்தது : umauma
பார்வை : 92

மேலே