உன் அன்பினை நாடி
உன் பார்வை பட்டால்
என் ஜீவன் ஆனந்தக்
கடலில் மூழ்கி அன்பெனும்
முத்தெடுத்து அலை போல
ஆர்பரித்து ஆசையுடன்
உனை வந்து சேருமே
என் நம்பிக்கை
கொண்டநட்பே
நீயும்உன்குடும்பமும்
நாளும் நலமுடன்
வாழ என் உயிரும்
உள்ளமும் இறைவனை
வேண்டிய படியே
வாழ்ந்து கொண்டிருக்கும்
உன் மௌனம் எனக்கு
புதிதல்ல உன்னை
உணர்த்தியதே உன்
மௌனமொழிதானே
உடைந்து போக மாட்டேன்
உன் மௌனத்தால் மறு
உருக் கொண்டு எழுவேன்
உன் அன்பினை நாடி....