புத்தம்புது அரசியல் காண்போமா - சந்தோஷ்

புத்தம்புது அரசியல் காண்போமா..!
---------------------------------------------------------
வா..........! வா........!
இளந்தலைமுறையே....!
தொடு...! தொடு....!
போர் ஒன்றினை...!
எழுந்து வா....!
உன் தலையெழுத்தை
மாற்றிட -ஊழல்
தலைவர்களின் தலையினை
வெட்டிவீழ்த்திட
எழுந்து வா..!
வீறுக்கொண்டு..
சீறும் புலியாய்
சினங்கொண்டு
பாய்ந்தோடி வா....!
நாளைய தலைமுறை
தலைநிமிர்ந்து
உன்னால் நடந்திடவே
எழுந்து வா...!
நாளைய தலைப்புச்செய்திகள்
தலைவனாய்
உனை எழுதிடவே,
இன்றைய தலையங்கத்தில்
உன் பெயரை நீயே
எழுதிட வா....!
ஆளும் கோட்டையில்
எதிர்க்கட்சி பூனைகளோடு
கைக்கோர்த்து உறவாடும்
பெருச்சாளிகளின் ராஜாங்கத்தை
கூண்டோடு கருவறுத்திட
அனல்கக்கி நெஞ்சம்நிமிர்த்தி
எழுந்து வா....!
தலைவிதி ...! தலைவிதி...!
என்று
தலைமுறை தலைமுறையாய்
திண்ணையில் பேசிய மூடர்களை
புறந்தள்ளி... புயல் வேகத்தோடு
புறப்பட்டு வா...!
புது ராஜாங்கம் படைத்திடுவோம்
புது அரசியல் எழுதிடுவோம்...!
திமிர்க்கொண்டு எழுந்து வந்தால்
அரண்டுக்கொண்டு ஓடுவார்கள்
அரசியல் அயோக்கியர்கள்..!
இடியோசையோடு எழுந்து வா..!
இடித்துவிடும் விசையோடு புறப்பட்டு வா..!
அந்த பாராளுமன்றமும்
இந்த சட்டமன்றமும்
கேடுக்கெட்ட அரசியல்
விஷக்கிருமிகளோடு
தூள் தூளாகி
மண்ணோடு மண்ணாகிவிட
மரண அடிக்கொடுத்திட
மாவீரனே....!
வீர தீர மங்கையே.
எழுந்து வா.....!
முத்தப்போராட்டம் போதும் போதும்
புத்தம்புதிய அரசியல் காண்போம்... ! காண்போம்...!
வாடா...................................!
வா...................................................!!
-இரா.சந்தோஷ் குமார்
( ஒரு குறும்படத்திற்கு எழுதப்பட்ட பாடல்)