அழகு

அன்னையின் அழகு அன்பில்.
மொழியின் அழகு தமிழில்..
மதத்தின் அழகு மனிதத்தில்
தேசத்தின் அழகு ஒற்றுமையில்..
புன்னகையின் அழகு மகிழ்ச்சியில்
பூமியின் அழகு புதுயுகத்தில்..
கண்களின் அழகு காதலில்
கண்ணீரின் அழகு ஆனந்தத்தில்..
மழையின் அழகு மண்வாசத்தில்
மழலையின் அழகு புன்னகையில்..
இலையின் அழகு பசுமையில்
இளமையின் அழகு உழைப்பில்..
கல்வியின் அழகு வெற்றியில்
கவிதையின் அழகு எழுத்தில்..
பூவின் அழகு வாசத்தில்
புத்தகத்தின் அழகு வாசிப்பில்..
வாழ்கையின் அழகு வசந்தத்தில்
வலிமையின் அழகு ஆரோக்யத்தில்..
என்றும் அழகு புன்னகையில்
வேண்டும் அழகு ஒற்றுமையில்..
வாழ்க அழகு..
வளர்க ஒற்றுமை..
நன்றி