ஒரு பூ வின் புலம்பல்
அழகான இரவு,அதில்
அழியாத நிலவு-அங்கு
அழகாய் பிறந்தேன்,இந்த
உலகில் மலர்ந்தேன்.
தினம் தினம் காற்றோடு போராட்டம்,
காற்றோடு முயன்றால் தான் எனக்கு
உயிர் ஓட்டம்.
வாழவே போராடினேன்,இருந்தும்
வாழ்வதற்க்கு முயற்சித்தேன்,
ஒருவன் எங்கு இருந்தோ வந்தான்,
என்னை பார்த்து சிரித்தான்,
நானும் ரசித்தேன்.
சற்றென்று என் உயிரை
எடுத்தான் அவன் கொலகாரன்!
என்னைப் பறித்து எவளுக்கோ
கொடுத்தான்.
நான் புரிந்து கொண்டேன் அவன்
காதலித்தான்.!
அவனை ஏசித்தேன்.
உன் பசிக்கு நான் இரையா!
அவள் முடியாது என்று சொல்ல
என்னை கீழ் விட்டான்!
தனியாய் இருந்தேன் சாலையில்,
அவன் அவளிடம் கெஞ்சினான்
அந்த மாலையில்!
எங்கிருந்தோ வந்த வண்டி,என்
உடலை சிதைத்தது.
புரிந்து கொண்டேன்.
தன்னலம் நிறைந்த பூமி.
எவன் பசிக்கோ இங்கு மற்றவன்
இரையாகிறான்.
இங்கு வாழ்வது பெரிது.
இறப்பது எளிது,
அவர்களே வழியனுப்பி வைப்பர்!
இறந்து கொண்டது பூ.
பிறந்து வருவது தன்னலப் பூ!!
{இனிமேல் காதலுக்கு பூவைப்
பறிக்காதீர்}