ஹிட்லரின் யூதர்கள்
பள்ளி சீருடை அணிய
நெய்தார்கள்
அப்பாவும்,அம்மாவும்....
"கருத்துடன் படி நம் நிலையை மாற்ற"
அப்பாவின் அறிவுரை
பையை நிறைத்தது
கைச்செலவுடன்.....
பன்னிரண்டு முடிந்தது
அறிவுரை அடிக்கடி
அலாரம் அடித்தமையால்
நல்ல மதிப்பெண்ணுடன்.....
கல்வி உதவித்தொகையில்
கல்லூரி
வந்தவுடன்
காதல்
நகைக்கடை தந்தையின் மகள்..
குருடானேன் அவளழகில்
அணைந்துவிட்டது
வீட்டின் அறிவுரை
விடுதி என்பதால்.....
கருத்திருந்தது
படிப்பை தவிர...
ஒருதலை காதல்
ஆறு மாதம்
உழைத்ததற்கு பரிசு
ஓரிடம்
அவள் மனதில்...
ஆழம் சென்றோம்
வலுத்தது எதிர்ப்பு
இருத்தரப்பிலும்...
கோடரி உடைந்தது
மன வலிமையால்..
காவல்துறையில் தஞ்சம்
கடைசியாக
கல்யாணம் முடிந்தது...
கால் பகுதி நிலுவையில்
படிப்பு
பகுதி நேர வேலையுடன்...
இருவரும்
பேச்சில்லை பெற்றோரிடம்...
கோவம்குறையா அவள் தந்தை
கொடுத்தது
கூலிப்படை
கிழ்சாதி மாப்பிளைக்கு சீதனமாக...
செல்ல மகளின் மறுப்பு
சாப்ளினை சர்வதிகாரியாக்கியது....
ஊரின் கௌரவம்
செய்தது
ஒரு கொலை
தூக்கி வளர்த்த மகளை
துச்சமாக எண்ணி...
சாதி என்று
உரைத்து
செய்தது சரிதானோ??
அட ஆண்டவா!!
ஆணும் பெண்ணும் படைத்த
இவ்வுலகில்
இச்சாதியாய் படைத்தது ஏனாம்?
மக்களை மாக்களக்கவா?
மேற்க்கத்திய கலாச்சாரம் மேல் என்றுப்பட்டது
சாதி சாக்கடையில் ஊறிய
பன்றிகளை
பார்க்கும்போது...
வெறுப்புடன்,
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்.