அ - கரம் ஒரு சிகரம்

மொழிக்கு உயிராய்
மொழிய வந்தது "அ"கரம் - அதுவே
வழிக்கு வழியாய்
வழிவிட்டு நின்ற "சிகரம்".

சிகரத்தைத் தொடுவதற்குச்
சீக்கிரத்தில் ஆகாதென்பார் - ஆனால்
"அ'கரத்தைத் தொட்டுவிட்டால்
ஆகாரம் கூட வேண்டாம் என்பார்.

கூடாரம் போடுவதற்குக்கூட
கூலிக்கு ஆள்வேண்டும் என்பார். - இந்த
"அ'கரம் எனும் கூடாரம் அமைந்து விட்டால் - மன
அலுப்பைக்கூட மறந்தேன் என்பார்.

உயிரிது உள்ளவரை - வெற்று
உடலிது உற்ச்சாகம் போடும். - நிலப்
பயிரதுக் காய்ந்துவிட்டால்
பட்டப்பாடு போனதே என வாடுவார்.

உயிரான "அ"கரம் உள்ளவரை மொழியின்
உடலது உணர்வறிந்து உற்சாகம் மிகும். - பிறப்
பயிராய் விளைகின்ற சொல்லெல்லாம்
பிறப்பெடுக்காமல் படும்பாடு பிறவாமல் வேகும்.
மிகுதியாய் மிளிர்கின்ற "அ"கரம் -பிற மொழிகளின்
பகுதியாய் உயிர்க் கொடுத்து - தமிழ்மொழியின்
பெருமைதனைப் பறைசாற்றும்.

குறிலாய் குரலெடுத்த "அ"கரத்தின் - கூடப் பிறப்புகளாய்
குயிலாய் குரலசைக்க "இ"கரமும்,"உ"கரமும், "எ"கரமும்
குன்றாமல் குறையில்லாமல் தமிழியை மொழிகின்றன.
நெடிலாய் நீடுயர்ந்த "ஆ"கரமும் - அடுத்து
நடுவழிப் பாதை அமைத்த "ஈ","ஊ" "ஏ" "ஓ" வும்
"அ"கரத்தின் சிகரத்தின் படிக்கற்கள் ஆயின.

எத்தனையோ படிக்கற்களாய் அமைந்துவிட்ட
எடுப்பான சொற்களாய் "அ"கரத்தினை உச்சியில்
ஏற்றிவிட்ட மடியா சொற்கள். - இப்படிகளின் வழியே
மா(ற்)றிவிட்ட மொழிகளாய் பிறமொழி பிறந்ததுவே.

(இணையதள எழுத்தாற்றல் மிக்க கவிஞர்களே "அ" வரிசைப்படுத்தாமல் கவிதை எழுதுங்கள். அவ்வாறு எழுதிவிட்டால் இந்தக் காஞ்சி மண்ணின் வாசத்தை இணையதள மூலமாக தெளிக்கின்றேன். வாழ்த்துக்களாக.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (30-Nov-14, 4:58 pm)
பார்வை : 1407

மேலே