விழி மூடி நீர் உறங்க

விழி மூடி நீர் உறங்க..........

விடியலின் தேடலுக்காய்
வித்தாகி விட்டவரே
தமிழினத்தின் வாழ்விற்காய்
தம் உயிரை நீத்தவரே
தனையன் இட்ட கட்டளையை
தலை மேல் சுமந்தவரே
நலம் வாழ நாம்
நன்னுயிரை ஈந்தவரே
விழி மூடி வணங்குகிறேன்
விண் சென்ற உங்களை..........

வேண்டும் ஒரு நாடு என்று
வேள்வி பல கண்டவரே
அக்கினி தாண்டவமதில்
ஆகுதியாய் ஆனவரே
மருந்தளவும் மண்னதனை
மாற்றான் தர மருத்தவரே
மண்டி இட்டு வணங்குகிறேன்
மகத்தான மாவீரர் உம்மை

பருவமத்தை விட்டெறிந்து
பக்குவம் பல கண்டவரே
வெடி சுமந்து வேங்கையாய்
விண் முட்ட பாய்ந்தவரே
நம்மை நாமே ஆள
நல்ல எண்ணம் கொண்டவரே
பறை சாற்றி போனவரே
பாரினில் உள்ளோம் நாமுமென
பாதம் பணிந்து வணங்குகிறேன்
பார் வியக்கும் உங்களை..........

நீவீர் கண்ட கனவுகளை
நிர்மூலம் ஆக்கிவிட
அடி போட்ட அரக்கர்களை
ஆண்டவனே ஆனாலும்
அவனையும் மன்னியோம்
நீர் அயர தரா மண்ணை
நாம் விரைந்து மீட்போமைய
நீர் உறங்கும் நிம்மதியாய்
நாம் உண்டு விடியலுக்காய்..........

திருமதி நேசா

எழுதியவர் : kavithasan (30-Nov-14, 6:10 pm)
சேர்த்தது : kavithasan
பார்வை : 103

மேலே