நாத்திகனும் வாழுகிறான்
ஆத்திகனும் வாழுகிறான்,
நாத்திகனும் வாழுகிறான் ,
நமக்குள் ஏன்தாண்டா மதம்!
மதம் பிடித்த யானை போல்,
மனிதரை அழித்திடும் மதம்
எமக்கு தேவையா? மனிதா!
ஆதியில் தோன்றிய மூதாதையர்கள் தான்
நமக்கு ஆண்டவன் தாண்டா மனிதா !
அவர்கள் தோன்றியதும்
இயற்கையின் இயல்பே தாண்டா!
நம் கண்முன்னே தெரிகின்ற
நம் தாய் தந்தை தாண்டா
நமக்கெல்லாம் தெய்வம் மனிதா !
தாய் தந்தையரை வணக்கிவிடு,
எல்லாம் தானே நடக்கும் மனிதா !
உலகையே கட்டுக்கோப்பாய் வைத்திடத்தாண்டா ,
மதங்களைப் படைத்தவனே ,மனிதன் தாண்டா !
அந்த மதமே மனிதரை, அழித்திடும் என்றால்
அந்த மதமே ஏண்டா? மதம்பிடித்த மனிதா !
ஈழத்தில் நடந்தது என்ன ?
சற்று எண்ணியே பாரடா மனிதா!
அடியெடுத்து அலகு குற்றி ,
காவடி சுமந்து தீச்சட்டி ஏந்திய, எம் மக்கள்
ஆண்டவா காப்பாற்று என்று கதறியதை!
எந்தமதம் காப்பாற்றியது மனிதா .......
கவிஞர் கவிதாசன்