சிறப்பின் சிறப்பு
ஓவியத்தின் தனித்தன்மை,
ஓவியனின் உன்னதம்.
காவியத்தின் தனிச் சிறப்பு,
கதை தரும் கருத்து.
சிலையின் முழு அழகு,
சிற்பியின் கை வண்ணம்.
படைப்பின் ரகசியம்,
பரவசத்தின் உச்சம்.
எண்ணங்களின் கோர்வை,
எழுத்தின் பிறப்பு.
மன்னிக்கத் தெரிந்த மனசு,
மறுக்கமுடியா உன்னதம்.
மழலை தரும் மகிழ்ச்சி,
வற்றாத ஜீவநதி.