மாடப்புறா

மாடப் புறாவே
மடியில் எனைத் தாங்கிய
என் மன்மதனிடம்
அவனுக்காக காத்திருந்த -என்
இதயத்தை தூது கொண்டு செல்

மனதிலே ஏதிலார் ஏசிய வார்த்தைகள்
பெரு வெள்ளமாய் அணைகளை உடைத்து செல்கிறதே
விழிகளின் ஓரத்திலே

துடைப்பதற்கு -என்
சொந்தமான உன் கரங்கள் இல்லையடா
இன்று இல்லாததால் கவலைகளை வாரி குவிக்கின்றது
மனதிலே பராமாய்

எங்கோ இருக்கும் உன் மனதுக்கு
இங்கே இருக்கும் என் மனதை
அலகில் சுமந்து செல்கிற -நம்
தூதுப் பறவையிடம் சொல்லி விடுகிறேன்
உனக்காக நான் ஏங்கிய ஏக்கங்களை

பவளங்கள் பாதத்தில் பதித்திருந்தும்
மின்னவும் இல்லை-----------------
தோழியின் இனிய உரையும்
மனதினில் உறையவில்லை--------------
மாமன்னர் என் தந்தையின் அன்பும்
விரும்பவில்லை -------------
தலையணையையும் தள்ளி வைக்கிறேன்
தலைவனின் துணை இன்றி ----------
செவியிலும் விழும்
புலனாய்வுகளும் விளங்கவில்லை ------
தலையில் சூடிய சுடர்கள் எல்லாம்
என் மெல்ல நடையில் உதிர்ந்து விழுகிறது ---
யோசனையில் உனக்கான நொடிகளை
கழிக்கப் பாக்கிறேன் -----
கார் மேகமும் எனை
சூழ்ந்து கொள்ள விரும்பவில்லை ----
நான் படும் துன்பம் பார்த்து
மாக்கள் கூட முறை இன்றி ஏசுகிறார்கள்

வந்து விடு எனை பிடித்த இருளை நீக்க
வந்து விடு
மணிப்புறாவிடம் மங்கள வார்த்தைகளை
என்னிட அனுப்பிவிடு

எழுதியவர் : $கீர்த்தனா$ (30-Nov-14, 8:04 pm)
பார்வை : 310

மேலே