இயற்கைஎழுதும் கடிதம்

இறைவனைக்கூட
இல்லையென்று
மறுத்துவிடலாம் .

என்னை
எவரும்
இல்லையென்று
மறுக்கமுடியாது .

நான்
இயற்கையாய் தோன்றிய
இயற்ககையாவேன்.

சூரியன் -சந்திரன் -கோள்கள்
ஆகாயம்-பூமி -அண்டசராசரங்கள்
மலைகள் -நதிகள் -கடல்கள்
மழை-காற்று-பனி
புல்-பூண்டு
பயிர் -பச்சை -உயிர்கள்
அனைத்துமே நான் ..
யாவுமாகியது நான் !

இயற்கையாகிய நான்
எழுதுகிறேன் ஓர் கடிதம் ...

மனித இனமே ..!
உன்
அதீத உழைப்பு
அசாத்திய ஆற்றல்
அறிவியல் கண்டுபிடிப்பு
அத்தனையும் கண்டு
நான்
அதிசயித்துப் போகிறேன்.

உன் மெய்ஞானம்
என் மேனியை
சிலிர்க்கச்செய்கிறது

உன் விஞ்ஞானம்
என்னோடு
போட்டிபோட்டு விளையாடுகிறது .

நான்
சாந்தமாய் ..
சமாதானமாய் ..
சிரித்துக்கொண்டிருக்கும் வரை
நீ
சாதித்துக் கொண்டிருக்கலாம் .

நான்
சாந்தம் இழந்து
சிரிப்பை மறந்து
சீறஆரம்பித்து விட்டால்
நீ
சாய்ந்துபோவாய் !

உன்
புதிய கண்டுபிடிப்புகள்
சமயங்களில்
என் மேனியை
புண்ணாக்கி விடுகிறது .

சமீப காலமாய்
நீ
எனக்கு
கேடுபுரிந்துவருகிறாய் .

இயந்திரங்கள் -வாகனங்கள்
ஆலைகள் -சூளைகள்
இணைந்து கக்குகின்ற புகைகள் ...

காடழிப்புகள்
'பிளாஸ்டிக் ' கழிவுகள்...
காற்றில்மாசு
நதிகளில் மாசு
இப்படி
பல்வேறு
சுற்றுச்சூழல் கேடுகளை
நீ நடத்துகிறாய் !

உன்னால்
என்
ஓசோன் போர்வை
ஒட்டையாகிவிட்டது!
இதனால்
ஏற்படப்போவது
என்னதெரியுமா ...?

சூரியனின்
மின்காந்தக் கதிர்களும்
புறஊதாக்கதிர்களும்
இறங்கி வந்து
உன்
பூமிப்பந்தை
பொசுக்கப்போகிறது.

துவக்கம்தான்
வெப்பமயமாதல் ..
பனிமலைகளின்உருக்கம் ...!

வேண்டாம்
மனித இனமே !
என் ஒசோனைக்காப்பாற்று
என்னைக் காப்பாற்று.
என்னைக் காத்து
உன்னைக்காத்துக்கொள் ..!

**** **** ***** **** **** ****

எழுதியவர் : அண்ணாதாசன் (30-Nov-14, 10:09 pm)
பார்வை : 195

மேலே