30 நாள் விடுமுறை
பொய் சொல்லேன் ,திருடேன்
பிறஉயிர் கொல்லேன்,
பிறர் மனை நோக்கேன்
போதை தொடேன் , புகைவிடேன்
இன்னும் முப்பது நாட்களுக்கு
ஏன் இந்த விடுமுறை ?
மாலை போட்டுள்ளேன்
மலைக்கு அல்லது
புனித மாதம் ஆகையால்
நோன்பு நோக்கின்றேன்
என நம்முள் பலர் சொல்வர்
முப்பது நாட்கள் விடுமுறை
அதனால் துன்பம் நீங்கி
நன்மைகிடைக்குமெனில்
நினைத்த காரியம்
நிறைவேறும் எனில்
இறைவனோடு வாழும்
பெருவாழ்வு கிடைக்குமெனில்
நாம் வாழும் வரை அதற்கு
விடுமுறை விடுவோமே
வசந்தம் என்பதை
வாழ்க்கையில் பெறுவோமே
எதிர்கால கனவினை எல்லாம்
எழிதாய் தொடுவோமே
வாருங்கள் ஒன்றாய்
விடுமுறை எடுப்போம்
புதிய தலைமுறை
படைப்போம்
கறைபடியாமல்

