போர்க்களம்
நடந்தெரியது பூக்களின் மிது போர்க்களம்,
மழைத்துளி விழுந்துத் தெறிக்கும்
நீர்ப்போல குண்டுகள் விழுந்து
சில்லுசில்லாய் சிதறிப்
போனது மனித உடல்கள்,
(`அய்யோ`)
எங்கே எனது தாயின் தலை,
எங்கே எனது தந்தையின் கால்கள்,
(`அய்யோ`)
எனது தங்கையின் உடலை
காணவேவில்லை,
எங்கிருந்தோ கேட்கிறது குழந்தையின் அழுகுரல்,
குழந்தையின் பக்கத்தில் இறந்த தாயின் சடலம்,
தனது தாயின் உயிர்ப் பிரிந்த வேதனையலோ,
சிதறிய மார்பில் பசியாற பால் வாரததலோ
குழந்தையின் கதறல் தெரியவில்லை,
நினைத்தால் கடலையே மூழ்கடிக்கும்
அளவிற்கு அழுகை வருகிறது,
எரிமலையை சிதறடிக்கும் அளவிற்கு
கோபமும் வருகிறது, ஆனால்
என்ன செய்வது இந்த கையால்லாகாத
கூட்டத்தில் நானும் ஒருவனாக
இருக்கும்போது.~~~~~~~~~~